Theme Check

கண்ணீர்விட்டு அழுத மோடி ! பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி !!

கண்ணீர்விட்டு அழுத மோடி ! பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி !!

கண்ணீர்விட்டு அழுத மோடி ! பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி !!
X

மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்பி குலாம்நபி ஆசாத் ஓய்வு பெறும் நிலையில், அவரது நினைவுகளை கூறி, பிரதமர் மோடி கண் கலங்கினார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத், ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அவரது பதவி விரைவில் நிறைவு பெறுகிறது. ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ராஜ்ய சபாவுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் குலாம்நபி ஆசாத்.

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் வயலார் ரவி, இந்திய முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அப்துல் வகாப் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராகேஷ் உள்ளிட்டோரின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. இதில் இரண்டு உறுப்பினர்கள் பதவிக்கு கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஒரு இடத்திற்கு காங்கிரஸ் கட்சியும் உறுப்பினரை தேர்வு செய்ய முடியும்.

கேரளாவில் 22 சதவீதம் உள்ள முஸ்லிம் மக்களின் வாக்குகளை கவரும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பாக மேல்சபை எம்.பி. பதவிக்கு குலாம்நபி ஆசாத்தை நிற்கவைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், குலாம்நபி ஆசாத் குறித்த நினைவுகளை மாநிலங்களவையில் பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். அப்போது, அவரது நடவடிக்கைகளை பாராட்டினார். மேலும், நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் குலாம்நபி ஆசாத் என புகழாராம் சூட்டினார். அப்போது அவரது கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்தது. இதனால், பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags:
Next Story
Share it