உள்ளாடையில் பணக்கட்டுகள்.. பெண்கள் கைது !!
உள்ளாடையில் பணக்கட்டுகள்.. பெண்கள் கைது !!

சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நேற்று சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.
விமானத்தில் பயணிக்க சென்ற சில பெண் பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அப்பெண்களை தனியாக அழைத்துச்சென்று, சுங்கத்துறை பெண் அதிகாரிகள் சோதனை செய்தது. அப்போது அவர்கள் சந்தேகப்பட்டதுபோன்று அதிர்ச்சிகரமான செயல் நடந்துள்ளது.

அதாவது மூன்று பெண்கள் உள்ளாடைகளுக்குள் மறைத்துவைத்து வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்றது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் திருச்சியை சேர்ந்த லட்சுமி (35), கனகவல்லி (29), திண்டுக்கல்லை சேர்ந்த மாரியம்மாள் (39) ஆகிய 3 பெண்கள் என்பது தெரியவந்து.
மூன்று பெண் பயணிகளின் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்திருந்தனர். அதன் மதிப்பு ரூ.35 லட்சம். மூன்று பெண்களையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.
newstm.in

