Theme Check

கள்ளக்காதலியுடன் தனிக்குடித்தனம்.. கணவர் வந்ததால் பயம்.. 5 வது மாடியில் இருந்து குதித்தவர் பலி..!

கள்ளக்காதலியுடன் தனிக்குடித்தனம்.. கணவர் வந்ததால் பயம்.. 5 வது மாடியில் இருந்து குதித்தவர் பலி..!

கள்ளக்காதலியுடன் தனிக்குடித்தனம்.. கணவர் வந்ததால் பயம்.. 5 வது மாடியில் இருந்து குதித்தவர் பலி..!
X

உத்தரபிரதேசம் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்தவர் மோசின் (29). இவருக்கு, திருமணமான 35 வயது பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் தனது சிறுவயது மகளை அழைத்துக் கொண்டு வாலிபர் மோசினுடன் கடந்த 2 வருடங்களுக்கு முன் தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து மோசின், அந்தப் பெண் மற்றும் அவருடைய மைனர் மகளுடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கட்டடத்தில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் கணவர், தனது மனைவியையும் மகளையும் தேடி வந்தார். அவர்கள் ஜெய்ப்பூரில் இருப்பதை அறிந்து அவர்களை சந்திக்க அங்கு வந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்தப் பெண்ணின் கணவர் மோசினுடன் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்ததும் பீதியடைந்த மோசின், வீட்டின் 5வது மாடியின் பால்கனியில் இருந்து குதித்தார். இதனால் படுகாயம் அடைந்த அவரை அந்தப் பெண் எஸ்எம்எஸ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு, சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை மோசின் உயிரிழந்தார். இதையடுத்து, அந்தப் பெண்ணும் அவருடைய மகளும் தலைமறைவாகி விட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
Share it