தமிழகத்தில் மேலும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு.. இன்றைய முழு நிலவரம் !!
தமிழகத்தில் மேலும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு.. இன்றைய முழு நிலவரம் !!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4.26 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. எனினும் கடந்த நில நாட்களாக தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 30,615 விட சற்று அதிகமாகும்.
இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,252 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 740 பேர் ஆண்கள், 512 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 41 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 772 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளார். இதில் 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 3 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 962ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், இன்று 4,768 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 80 ஆயிரத்து 049 ஆக அதிகரித்துள்ளது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in

