Theme Check

இனி கவனம் தேவை.. தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. இன்றைய நிலவரம் !!

இனி கவனம் தேவை.. தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. இன்றைய நிலவரம் !!

இனி கவனம் தேவை.. தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. இன்றைய நிலவரம் !!
X

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது, கொரோனா முடிந்துவிட்டது என கருதி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். பள்ளிகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டு மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு செல்லத்தொடங்கிவிட்டனர்.

ஆனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நூறுக்கும் கீழ் இருந்த தினசரி பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்து தற்போது 2,500ஐ தாண்டியுள்ளது.

dsfd

இந்த நிலையில், இன்று ஒரேநாளில் தினசரி கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,672- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 2,533 ஆக பதிவாகியிருந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 14,504- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று 1,487- பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் ஒருநாள் பாதிப்பு 1025-ல் இருந்து 1072- ஆக உயர்ந்துள்ளது.


newstm.in

Next Story
Share it