Theme Check

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் யோகா செய்து அசத்தல் !!

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் யோகா செய்து அசத்தல் !!

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் யோகா செய்து அசத்தல் !!
X

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரிய கலை யோகா. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய யோகா கலை, இப்போது உலகமெங்கும் பரவி இருக்கிறது. உடல், உள்ளம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த கலையை உலகமெங்கும் பரப்பும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டு ஐ.நா. பொதுசபை அங்கிகரித்தது.


அதைத் தொடர்ந்து உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம், 2015ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) 7ஆவது சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொது இடங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் யோகா பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாகி உள்ளது.


இந்நிலையில் அமெரிக்காவில் இந்தியாவின் துணைத் தூதரகம், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா கொண்டாட்டங்களை நடத்தப்பட்டது. 'சங்கராந்தி' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து இளைஞர்கள், பெண்கள் என பலரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it