Theme Check

மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் கைது.. 5 அழகிகள் மீட்பு !

மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் கைது.. 5 அழகிகள் மீட்பு !

மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் கைது.. 5 அழகிகள் மீட்பு !
X

தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு குடும்பத்திலும் குடும்ப உறுப்பினர்களாலும் தான் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. அந்த வகையில், மதுரையில் சிறுமிக்கு அவரது தாயால் நடந்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் அருகிலுள்ள ஹார்விபட்டி பகுதியில் வீடு ஒன்றில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு புகாரை உறுதி செய்தனர். இதனையடுத்து, உதவி காவல் ஆணையர் அக்பர்கான் தலைமையில் திருப்பரங்குன்றம் மகளிர் காவல் ஆய்வாளர் ஹேம மாலா, ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் பிளவர் ஷீலா ஆகியோர் அடங்கிய தனிப் படையினர் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர்.
rape
அப்போது, பெண்களை வைத்து பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தியதாக கிருஷ்ணமூர்த்தி, அசோக்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், அங்கிருந்த 5 பெண்கள் மற்றும் 16 வயது சிறுமி ஒருவரும் மீட்கப்பட்டனர்.

விசாரணையில், அச்சிறுமியின் தாயே அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டார். சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் உட்பட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it