ஒரு வயது குழந்தையை உயிருடன் தீவைத்து எரித்துவிட்டு தற்கொலை செய்த தாய்!
ஒரு வயது குழந்தையை உயிருடன் தீவைத்து எரித்துவிட்டு தற்கொலை செய்த தாய்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பைலட் லேன் பகுதியைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். மொபைல் ஷோரூம் ஊழியரான இவர் தனது மனைவி லதா(27) மற்றும் ஒரு வயது குழந்தை நிக்ஷிதா மற்றும் தனது தாய் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கரு கலைக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை முடிந்து நேற்றுமுன்தினம் வீடு திரும்பியுள்ளார்.
அவருக்கு மீண்டும் ரத்தப்போக்கு ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் நேரத்தில் மதியம் கதவை தாழிட்டுக்கொண்டு உள்ளே சென்ற லதா, வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன் மீதும் குழந்தை மீதும் ஊற்றி பற்றவைத்துக் கொண்டார். வீட்டிலிருந்து கரும் புகை மற்றும் அலறல் சத்தம் அதிகமாக வரவே அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லதா தீக்காயத்தில் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார்.
மேலும், தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய குழந்தையை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் 80% தீக்காயங்கள் ஏற்பட்டதால் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வயது கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
newstm.in


