Theme Check

தாய், மகள் எரித்துக் கொலை: இலங்கைத் தமிழர் இருவர் கைது..!

தாய், மகள் எரித்துக் கொலை: இலங்கைத் தமிழர் இருவர் கைது..!

தாய், மகள் எரித்துக் கொலை: இலங்கைத் தமிழர் இருவர் கைது..!
X

மண்டபத்தில், வீட்டிலிருந்த தாய், மகளை எரித்துக் கொன்ற வழக்கில் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்; மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ரயில்வே குடியிருப்பில் வசித்தவர் காளியம்மாள் (58). இவர், மண்டபம் ரயில்வே மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். கணவர் இறந்த நிலையில், தனது இளைய மகள் மணிமேகலையுடன் (33) வசித்து வந்தார்.

இந்நிலையில், மதுரையில் வசிக்கும் மூத்த மகள் சண்முகப்பிரியாவை ஊருக்கு வருமாறு கடந்த திங்கட்கிழமை செல்போனில் காளியம்மாள் அழைத்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை மண்டபத்துக்கு வந்த சண்முகப்பிரியா, வீட்டில் வெள்ளையம்மாளும், மணிமேகலையும் எரித்துக் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இவ்வழக்கில், மண்டபம் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் சசிகுமார் (35), ராஜ்குமார் (30) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 தங்க வளையல், 2 செயின், 2 தோடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நிசாந்தன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், நகை மற்றும் பணத்தை திருட வந்த இம்மூவரும் காளியம்மாள், மணிமேகலையை எரித்துக் கொன்றதாக தெரிய வந்தது.

இதனிடையே, வியாழக்கிழமை காலை தென்மண்டல ஐஜி அன்பு, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Next Story
Share it