Theme Check

வீட்டில் ரத்தவெள்ளத்தில் மிதந்த தாய், மகள்.. பெரும் அதிர்ச்சி !

வீட்டில் ரத்தவெள்ளத்தில் மிதந்த தாய், மகள்.. பெரும் அதிர்ச்சி !

வீட்டில் ரத்தவெள்ளத்தில் மிதந்த தாய், மகள்.. பெரும் அதிர்ச்சி !
X

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த தாய் திரேசம்மாள், மகள் பவுலின் மேரி ஆகியோரை அடித்து கொலை செய்த மர்ம நபர்கள் அவர்கள் கழுத்தில் கிடந்த 21 சவரன் தாலி சங்கிலி மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தில் அன்றோ சகாயராஜ் - பவுலின் மேரி (48) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதியின் இரு மகன்களும் சென்னையில் படித்து வருகின்றனர். அன்றோ சகாயராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பவுலின் மேரி மட்டும் தனத தாய் தெரசம்மாளுடன் (82) முட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

police

இந்த நிலையில், நேற்று அவர்களது உறவினர்கள் பவுலின் மேரி என்பவல் செல்போனில் அழைத்த போது எடுக்கவில்லை. பின்னர் பலமுறை முயற்சி செய்தும் செல்போனில் தொடர்பு கொள்ள முடியாததால், சந்தேகமடைந்து நேரடியாக வீடிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு மின்சார இணைப்பு பெட்டி உடைக்கபட்டு இருந்ததை கண்டு முன்பக்க கதவினை உடைத்து சென்று பார்த்துள்ளார்.

அங்கே, பவுலின் மேரி மற்றும் அவரது தாய் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் . அங்கு வந்த போலீசார் சோதனை செய்த போது தாய்-மகள் இருவரும் தலையில் கம்பால் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

murder

மேலும் கழுத்தில் அணிந்து இருந்த தாலி செயின் மற்றும் வீட்டில் இருந்த நகைகளும் மாயமாகி இருந்தன. இந்த கொலை நகைக்காக நடந்ததா அல்லது வழக்கினை திசை திருப்ப நகை கொள்ளையடிக்க பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் முன்தினமே கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Next Story
Share it