Theme Check

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற தாய்!! அரசு மருத்துவமனையில் சாதனை..

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற தாய்!! அரசு மருத்துவமனையில் சாதனை..

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற தாய்!! அரசு மருத்துவமனையில் சாதனை..
X

அரிதிலும் அரிதாக, மத்தியப் பிரதேச மாநிலம் சியோபுர் பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

சியோபுர் மாவட்டம் பரோடாவில் வசிக்கும் மூர்த்தி(23) என்பவரின் மனைவி வினோத் மாலிக்கு இது முதல் பிரசவம். கருவுற்று ஏழு மாதங்களே ஆன நிலையில் அவருக்கு பிரசவவலி ஏற்பட்டதால், அருகில் உள்ள சியோபூர் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும்படி பரோடா மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற தாய்!! அரசு மருத்துவமனையில் சாதனை..அதன்படி சியோபூர் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டு அங்கு அவருக்கு சோனாகிராபி எடுத்துப்பார்த்தனர். அப்போது வினோத் மாலிக்கு 6 குழந்தைகள் இருப்பதை அறிந்து மருத்துவர்கள் ஆச்சர்யமுற்றனர். பின்னர் 35 நிமிடத்தில் 6 குழந்தைகளும் பிறந்தது. 6 குழந்தைகளும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன. ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற தாய்!! அரசு மருத்துவமனையில் சாதனை..

இதில் 4 குழந்தைகளின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் தாயின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனையில் இதுபோல ஒரு பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல் முறை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it