Theme Check

“மீன் விற்கும் தாய் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டது அதிர்ச்சி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

“மீன் விற்கும் தாய் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டது அதிர்ச்சி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

“மீன் விற்கும் தாய் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டது அதிர்ச்சி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
X

கன்னியாகுமரியில் மூதாட்டி ஒருவரை பேருந்திலிருந்து நடந்துநர் இறக்கி விட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி வாணியக்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வமேரி என்ற மூதாட்டி மீன் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல குளச்சல் பேருந்துநிலையத்தில் இருந்து வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறினார்.

அப்போது, துர்நாற்றம் வீசுவதாகக் கூறி அவரை பேருந்தில் இருந்து நடத்துநர் இறக்கிவிட்டுள்ளார். மீண்டும் நடந்து செல்ல வேண்டிய துயரத்தில் அந்த மூதாட்டி, பேருந்து நிலைய நிர்வாக அலுவலகம் முன் நியாயம் கேட்டு கதறி அழுதார்.

knk fish

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து பல்வேறு தரப்பினரும் நடத்துனரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். பேருந்து, ஓட்டுநர், பேருந்து நேரக் காப்பாளர் ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதில், குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.


மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it