Theme Check

2 குழந்தைகளுடன் தாய் உயிருடன் எரித்துக் கொலை.. நெஞ்சை பதற செய்யும் சம்பவம் !!

2 குழந்தைகளுடன் தாய் உயிருடன் எரித்துக் கொலை.. நெஞ்சை பதற செய்யும் சம்பவம் !!

2 குழந்தைகளுடன் தாய் உயிருடன் எரித்துக் கொலை.. நெஞ்சை பதற செய்யும் சம்பவம் !!
X

பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தீ வைத்து உயிருடன் எரித்துகொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கான்பூர் பகுதியில் ஜிதேந்திர யாதவ் என்பவர் தனது மனைவி அர்ச்சனா (29), 5 வயது மகள் அக்ஷிதா மற்றும் 15 மாத மகன் ஹனு ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். ஜிமேந்திர யாதவ் வீட்டின் அருகே அவனேஷ்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பெண் கான்ஸ்டபிள் உஷா என்பவரின் கணவர் ஆவார்.

சம்பவத்தன்று அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது ஜிதேந்திர யாதவ் வீட்டிற்குள் அவனேஷ் திடீரென அத்துமீறி நுழைந்துள்ளார். அர்ச்சனா தனது பிள்ளைகளுடன் சமையலறையில் இருந்துள்ளார். ஜிதேந்திரா வீட்டின் மற்றொரு பகுதியில் இருந்துள்ளார். இரண்டு குழந்தைகளும் இருந்த அர்ச்சனா மீது வீட்டிற்குள் புகுந்த அவனேஷ் வெட்ரோல் ஊற்றியுள்ளார்.

அர்ச்சனாவையும் இரண்டு குழந்தைகளையும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டதும், ஜிதேந்திராவும், அக்கம்பக்கத்தினரும் மூவரையும் மீட்டு விரைந்து மருத்துவமனைக்குச் சென்றனர்.

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர். இதனிடையே, மூவரையும் உயிருடன் எரித்தப்பின்னர் அவனேஷ் தப்பியோடும்போது நெடுஞ்சாலையில் வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அவர் கான்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகளையும் தாயையும் எரிக்கப்பட்டதற்கான உண்மை காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it