மருமகளை நிர்வாணமாக்கி தாக்கிய மாமியார்.. வீடியோ வைரல் ஆனதால் அதிர்ச்சி !
மருமகளை நிர்வாணமாக்கி தாக்கிய மாமியார்.. வீடியோ வைரல் ஆனதால் அதிர்ச்சி !

வரதட்சணை தராத மருமகளை நிர்வாணமாக்கி, மாமியார் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் பரப்பு ஏற்பட்டது.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் 24 வயது பெண் ஒருவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் பெற்றோர்கள் பேசி முடிவெடுத்து திருமணம் நடத்திவைத்தனர். அப்போது பேசியதைவிட பெண் வீட்டில் சிறிது குறைவாக வரதட்சணை கொடுத்ததாக கூறப்படுகிறது.

திருமணம் முடிந்தபின்னர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு அப்பெண்ணை அவரது கணவரின் தாயாரான மாமியார் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதில் உட்சமாக வரதட்சணை வழங்காத காரணத்தால் இளம்பெண் மாமியாரால் நிர்வாணமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதனை கண்ட பெண்ணின் வீட்டார் அதிர்ச்சி அடைந்து போலீசாரிடம் புகார் அளித்தனர். பின்னர் இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி அந்த வீட்டிற்கு சென்று பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது, குற்றம்சாட்டப்பட்ட மாமியார் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
newstm.in

