Theme Check

தடாலடியாக உயர்ந்த கேஸ் விலை… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

தடாலடியாக உயர்ந்த கேஸ் விலை… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

தடாலடியாக உயர்ந்த கேஸ் விலை… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!
X

உக்ரைன் - ரஷ்யா போர் விளைவாக இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் உடனடியாக பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. மாற்றமின்றி தொடர்கிறது. இந்நிலையில் சிஎன்ஜி கேஸ் (CNG) விலை தடாலடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி கேஸ் வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

டெல்லி பகுதியில் சிஎன்ஜி விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல் சிஎன்ஜி விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. டெல்லியில் சிஎன்ஜி விலை 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

cng1

இதற்கு முன் டெல்லியில் சிஎன்ஜி விலை ஒரு கிலோவுக்கு 57.01 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் இன்று முதல் சிஎன்ஜி விலை கிலோவுக்கு 57.51 ரூபாயாக உயர்ந்துள்ளது. நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஸியாபாத் ஆகிய பகுதிகளில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு 59.58 ரூபாயாக உயர்ந்துள்ளது.

குருகிராமில் சிஎன்ஜி விலை 65.88 ரூபாயாகவும், ரெவாரியில் 67.98 ரூபாயாகவும், கர்னலில் 66.18 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. தேர்தல் முடிந்த அடுத்த நாளே சிஎன்ஜி விலை உயர்ந்துள்ள நிலையில், அடுத்தடுத்து பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை விரைவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it