விண்டேஜ் கார்களின் காதலன் எம்.எஸ்.தோனி.. வியக்கவைக்கும் தோனியின் கராஜே !
விண்டேஜ் கார்களின் காதலன் எம்.எஸ்.தோனி.. வியக்கவைக்கும் தோனியின் கராஜே !

இருசக்கர வாகனங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட தோனி, மிக மிக பழங்கால கார்களை வாங்கி குவித்துருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் என அழைக்கப்படுபவர் மஹிந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள இவர் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் மீது இவருக்கு இருந்த காதல் தான் ரசிகர்கள் அவரை கொண்டாட வைத்துள்ளது என்றே கூறலாம்.

ஆனால், கிரிக்கெட் போலவே வாகனங்களின் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர் தோனி. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் தற்போது அவருடைய கராஜே என கூறப்படும் வாகன நிறுத்துமிடம் குறித்த புகைப்படம் வெளியாகி பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு பைக் மற்றும் கார்கள் பல மாடல்களில் ஏராளமாக இருக்கின்றன. அனைத்தும் பிற முக்கிய பிரபலங்களிடத்தில் இருப்பதைப் போன்று ஏதோ வழக்கமான விலை உயர்ந்த வாகனங்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் ஒவ்வொரு வாகனமும் அரிய வகை வாகனங்களாகும். இவைகளை மிஞ்சும் வகையில் தற்போது மிக மிக பழைய கார் ஒன்றை வாங்கியிருக்கின்றார் தோனி. லேண்ட் ரோவர் 3 காரையே அவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த காரை பிக் பாய்ஸ் டாய்ஸ் (Big Boy Toyz) எனும் நிறுவனம் நடத்திய ஏலத்தின் வாயிலாகவே தோனி வாங்கியிருக்கின்றார். பயன்படுத்திய சொகுசு வாகனங்களை விற்பனைச் செய்யும் நிறுவனம் ஆகும். இது, விண்டேஜ் மற்றும் கிளாசிக் ரக வாகனங்களை ஏலம் விடும் செயலையும் நாட்டில் மேற்கொண்டு வருகின்றது.

அவ்வாறு அது அண்மையில் மேற்கொண்ட விண்டேஜ் வாகனங்களுக்கான ஏலத்தில் கலந்துக் கொண்டே தோனி, லேண்ட் ரோவர் 3 காரை வாங்கியிருக்கின்றார். கடந்த ஆண்டு டிசம்பரில் ஆன்லைன் வாயிலாக இந்த ஏலத்தை பிக் பாய்ஸ் டாய்ஸ் நிறுவனம் நடத்தியது குறிப்பிடத்தகுந்தது.
இதில் பலர் பங்கு பெற்று லேண்ட் ரோவர் 3 விண்டேஜ் மற்றும் கிளாசிக் காரை வாங்க போட்டி போட்டதாக பிக் பாய்ஸ் டாய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், முன்னணி பிரபலங்கள் சிலரும் அடங்குவர். நிறுவனம் லேண்ட் ரோவர் 3 காருடன் சேர்த்து இன்னும் பல கார்களையும் ஏலத்திற்கு அறிவித்திருக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ், கடில்லாக் ப்யூக், செவ்ரோலட், ஆஸ்டின், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பல முன்னணி நிறுவனங்களின் 19 கார்கள் எக்ஸ்க்ளூசீவாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தற்போது ஏலத்தில் விற்றிருக்கின்றன.
ஏல முடிவுகள் கடந்த 8ம் தேதி அன்றே வெளியிடப்பட்டது. இதன் வாயிலாகவே தல தோனி லேண்ட் ரோவர் 3 விண்டேஜ் காரை வாங்கியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.
நாடு தழுவிய அளவில் இந்த ஏலம் நடை பெற்றிருக்கின்றது. இதில், காரை வாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் பங்கேற்று தல தோனி லேண்ட் ரோவர் 3 காரை வாங்கியிருக்கின்றார். இந்தியாவில் பழங்கால வாகனங்களை வாங்குவோர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. ஆகையால், மிக விரைவில் இந்த பிரிவு பெருமளவில் வளர்ச்சி அடையும் என பிக் பாய்ஸ் டாய்ஸ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
newstm.in

