Theme Check

தொடர்ந்து 9 வருடங்களாக மும்பை அணியின் மோசமான சாதனை!

தொடர்ந்து 9 வருடங்களாக மும்பை அணியின் மோசமான சாதனை!

தொடர்ந்து 9 வருடங்களாக மும்பை அணியின் மோசமான சாதனை!
X

ஐபிஎல் 14ஆவது சீசின் நேற்று கோலாகலமாக ஆரம்பம் ஆனது. இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஆறு நகரங்களில் மட்டும் நடத்தப்படுகின்றன. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் லீக் போட்டிகளும், பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத் மோடி மைதானத்திலும் நடைபெறுகிறது.கொரோனோ பரவல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

முதல் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. கடைசி பந்துவரை விறுவிறுப்பாகச் சென்ற இப்போட்டியில் பெங்களூர் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்ததன் மூலம், ஐபிஎல் தொடரின் தனது முதல் லீக் போட்டியில் தொடர்ந்து 9 வருடங்களாகத் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

  • MI vs RCB, 2013 - 2013ஆம் ஆண்டில் ஆர்சி அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
  • MI vs KKR, 2014 - 2014ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் முதல் லீக் போட்டியில் தோல்வியைச் சந்தித்தது.
  • MI vs KKR, 2015 - 2015ஆம் ஆண்டிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தனது முதல் லீக் போட்டியில் சந்தித்துத் தோல்வியடைந்தது.
  • MI vs RPS, 2016 - 2016ஆம் ஆண்டில் ரைஸிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணியைத் தனது முதல் லீக் போட்டியில் எதிர்கொண்டு தோல்வியை சந்தித்தது.
  • MI vs RPS, 2017 - 2017ஆம் ஆண்டில் மீண்டும் புனே அணியைத் தனது முதல் லீக் போட்டியில் எதிர்கொண்டு தோல்வியடைந்தது.
  • MI vs CSK, 2018 - 2018ஆம் ஆண்டில் சிஎஸ்கேவை எதிர்கொண்டு தோல்வியடைந்தது.
  • MI vs DC, 2019 - 2019ஆம் ஆண்டில் டெல்லி கேபிடல்ஸ் அணியைத் தனது முதல் லீக் போட்டியில் எதிர்கொண்டு தோல்வியடைந்தது.
  • MI vs CSK, 2020 - 2020ஆம் ஆண்டில் சிஎஸ்கேவை தனது முதல் லீக் போட்டியில் எதிர்கொண்டு தோல்வியடைந்து இறுதியில் கோப்பை வென்றது.
  • MI vs RCB, 2021 -2021ஆம் ஆண்டிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைத் தனது முதல் லீக் போட்டியில் எதிர்கொண்டு தோல்வியடைந்துள்ளது.
Tags:
Next Story
Share it