பத்திரிகையாளர் மீது கொலை வெறி தாக்குதல்!! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு..
பத்திரிகையாளர் கொலை வெறி தாக்குதல்!! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று முன்தினம் இரவு குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் பத்திரிகையாளர் கார்த்திக் மீது மர்ம நபர்கள் சிலர் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த பத்திரிகையாளர் கார்த்திக்கை பொதுமக்கள் சிலர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, விருதுநகர் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த கு.முருகன் மற்றும் செல்லபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பத்திரிக்ககையாளர் கார்த்தி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சிவகாசியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பத்திரிகையாளர் கார்த்திக் தாக்கப்பட்டதற்கு பின்னணியில் இருக்கும அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
newstm.in


