முதலமைச்சருக்கு கொலை மிரட்டல்
திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அதில் முதல்வர் பினராயி விஜயனை கொல்வோம் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று பினராயி விஜயன் அறிவித்தார். மேலும் சட்டத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அதில் முதல்வர் பினராயி விஜயனை கொல்வோம் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று பினராயி விஜயன் அறிவித்தார். மேலும் சட்டத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். மேலும் சி.ஏ.ஏவை முன்வைத்து எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ போன்ற அமைப்புகள் மக்களிடம் குழப்பத்தை உருவாக்கி வருகிறது என்று கடுமையாக விமர்சனமும் செய்திருந்தார் பினராயி.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் ரகீமுக்கு கடிதம் வந்துள்ளது. அதில் பினராயி விஜயன், ரகீம் ஆகிய இருவரையும் வீடு புகுந்து வெட்டி கொல்வோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

