Theme Check

ஒன்றாக மது அருந்தும்போது கொலை.. காலையில் மனைவி உடலை பார்த்து அதிர்ந்த கணவன் !!

ஒன்றாக மது அருந்தும்போது கொலை.. காலையில் மனைவி உடலை பார்த்து அதிர்ந்த கணவன் !!

ஒன்றாக மது அருந்தும்போது கொலை.. காலையில் மனைவி உடலை பார்த்து அதிர்ந்த கணவன் !!
X

டெல்லி சுல்தான்பூரில் வசித்துவந்தனர் வினோத் குமார் துபே (47), சோனாலி (39 ) தம்பதி. இவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு திருமணமானது. வினோத்துக்கும் அவரது மனைவி சோனாலிக்கும் மதுஅருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் இருவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம்.

அவ்வாறு நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இருவரும் ஒன்றாக இணைந்து மதுக்குடித்துள்ளனர். அப்போது, ஒருகட்டத்தில் தனக்கு உணவு பரிமாறிமாறு மனைவி சோனாலியிடம் வினோத் கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த சோனாலி கணவருக்கு உணவு பரிமாற மறுத்துள்ளார். இந்த விவகாரம் இருவருக்கும் இடையே பிரச்சனையை உண்டாக்கியது.

foot

உணவு தரமறுத்ததால் ஆத்திரமடைந்த வினோத், மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவரும் போதையில் இருந்ததால் ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் வினோத் தனது மனைவியை தலையணையால் இருக்கு கொலை செய்துள்ளார். பின்னர் இரவு முழுவதும் உயிரிழந்த தனது மனைவி அருகேயே உறங்கியுள்ளார்.

காலையில் போதை தெளிந்ததும் எழுந்த வினோத் தனது மனைவி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். போதையில் சோனாலியை கொலை செய்ததை உணர்ந்த வினோத், போலீசாரிடம் சிக்காமல் இருக்க வீட்டில் இருந்த ரூ 40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றார்.

foot

ஆனால் சோனாலி வீட்டில் நடமாட்டம் இல்லாததை உணர்ந்து சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் உயிரிழந்து கிடந்த சோனாலி உடலை மீட்டனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it