Theme Check

வழக்கில் இருந்து முருகன் விடுதலை.. நீதிமன்றம் உத்தரவு..!

வழக்கில் இருந்து முருகன் விடுதலை.. நீதிமன்றம் உத்தரவு..!

வழக்கில் இருந்து முருகன் விடுதலை.. நீதிமன்றம் உத்தரவு..!
X

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருபவர் முருகன்.

இவர், கடந்த 2020-ம் ஆண்டு சிறையில் இருந்து அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியது தொடர்பாக சிறைத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு வேலூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து முருகனை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது.

அரசு தரப்பில் இருந்து போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story
Share it