கலைஞர் கருணாநிதிக்காக பிறந்த தேதியை மாற்றிய இசைஞானி இளையராஜா !!

கலைஞர் கருணாநிதிக்காக பிறந்த தேதியை மாற்றிய இசைஞானி இளையராஜா !!

கலைஞர் கருணாநிதிக்காக பிறந்த தேதியை மாற்றிய இசைஞானி இளையராஜா !!
X

தமிழ் சினிமாவையும் இசைஞானி இளையராஜாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. காசே வாங்காமல் அனைவரது வலிகளுக்கும் மெல்லிசைகளால் மருந்துபோடும் இசைமேதை இளையராஜாவிற்கு இன்று பிறந்தநாள். இளையராஜா பிறந்தது ஜூன் 3ம் தேதிதான். ஆனால், ஆண்டுதோறும் ஜூன் 2ம் தேதியே தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் இளையராஜா. திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்ததினம் ஜூன் 3ம் தேதி. அரசியல், சினிமா, இலக்கியம் என பன்முக சாதனையாளரான கருணாநிதி மீது, அன்பும், மரியாதையயும் வைத்துள்ள இளையராஜா அவருக்காக தன் பிறந்ததினத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக இளையராஜா முன்பு அளித்த பேட்டியில், கருணாநிதி தமிழுக்காற்றிய தொண்டில் சிறு பகுதியைக் கூட தாம் செய்யவில்லை. அவர் பிறந்த நாளில் தானும் பிறந்தது பெருமை என்றும் கூறியிருந்தார். எனவே, ஜூன் 3ம் தேதி கலைஞரைத்தான் தமிழகம் வாழ்த்த வேண்டும். என்னை போற்றக்கூடாது அதனால் தான் என் பிறந்த நாளை ஜூன் 2ம் தேதி கொண்டாடுகிறேன் என்று இளையராஜா குறிப்பிட்டிருக்கிறார். “இசைஞானி”என்ற பட்டத்தை இளையராஜாவிற்கு வழங்கியவர் கருணாநிதி. இதனால் இளையராஜாவுக்கு கருணாநிதி மீது அதீத மரியாதை உண்டு.

Tags:
Next Story
Share it