Theme Check

விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்!!

விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்!!

விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்!!
X

இசைஞானி இளையராஜாவின் இசை விரைவில் விண்வெளியில் ஒலிக்க இருக்கிறது. அதற்கான ஒப்புதலையும் அவர் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த குழு ஒன்று, இஸ்ரோ உதவியுடன் உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோள்களில் ஒன்றை உருவாக்கியுள்ளது.

அது நாசாவின் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அந்த சாட்டிலைட்டில் இளையராஜா பாடல் ஒன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, அங்கு ஒலிபரப்பப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ilayaraja

தனது இசையை விண்வெளியில் இசைக்க இளையராஜா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் இளையராஜா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

newstm.in

Next Story
Share it