கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்.. ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!
கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்.. ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க, மே 20-ம் தேதி வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் இன்றுடன் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, நாளை (14-ம் தேதி) முதல் ஜூன் 12-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படும்.
மீண்டும், ஒன்று முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஒன்று முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படும் நிலையில், விடைத்தாள் திருத்துதல் உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க மே 20-ம் தேதி வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Next Story

