Theme Check

குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிய மட்டன் குழம்பு.. பஞ்சாயத்தை தீர்த்த போலீஸ் !!

குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிய மட்டன் குழம்பு.. பஞ்சாயத்தை தீர்த்த போலீஸ் !!

குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிய மட்டன் குழம்பு.. பஞ்சாயத்தை தீர்த்த போலீஸ் !!
X

வீட்டில் மனைவி மட்டன் சமைக்கவில்லை என்பதால் 100க்கு டயல் செய்த கணவன் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள செர்லா கௌராராம் கிராமத்தில் நவீன் என்பவர் தனது மனைவியுடன் வசித்துள்ளார். இந்த நிலையில், ஹோலி பண்டிகையையொட்டி வீட்டில் மட்டம் சமைக்குமாறு, நவீன் தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் நவீனின் மனைவி மட்டன் சமைக்க மறுத்துள்ளார்.

மட்டன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. நவீன் மதுபோதையில் இருந்ததால், கோபத்தில் மனைவி மீது காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்தார். இதற்காக அவசர எண் 100க்கு டயல் செய்து காவல்துறையை அணுகியுள்ளார். முதலில் இது ஒரு குறும்பு அழைப்பு என மறுமுனையில் இருந்த காவலர் அழைப்பை துண்டித்துள்ளார். ஆனால் நவீன் தொடர்ந்து 6 முறைக்கு மேல் 100க்கு டயல் செய்து கொண்டே இருந்துள்ளார்.
police


நவீன் தொடர்ந்து அழைப்புகளை செய்தபோது, அழைப்புகளை கையாளும் காவல்துறை அதிகாரி தனது மேலதிகாரிகளுக்கு இந்த சம்பவத்தை புகாராக தெரிவித்தார். காவல்துறையினர் நவீன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். தொலைபேசி எண்ணை வைத்து அழைத்தது யார் எனக் கண்டுபிடித்தனர், மறுநாள் காலை சில போலீஸ்காரர்கள் அவரது வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

நவீன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 290 (பொது தொல்லை) மற்றும் 510 (குடிபோதையில் பொது இடத்தில் தவறான நடத்தை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். டயல் 100 வசதியை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it