Theme Check

"எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம்" பியர் கிரில்ஸ் பெருமிதம் !

"எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம்" பியர் கிரில்ஸ் பெருமிதம் !

எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் பியர் கிரில்ஸ் பெருமிதம் !
X

பிரதமர் மோடியுடன் காட்டில் தேநீர் அருந்திய போது எடுத்த புகைப்படமே தனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் 'Man Vs Wild’ என்ற நிகழ்ச்சி உலகில் மிகவும் பிரபலமானது. காட்டுக்குள் சென்று உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து பியர் கிரில்ஸ் நடத்தி வரும் நிகழ்ச்சியாகும். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

இந்நிலையில், பிரதமர் மோடியுடன் டீ அருந்தும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பியர் கிரில்ஸ் ‘ஈரமாக நனைந்த பின்னர் பிரதமர் மோடியுடன் ஒரு கப் டீ’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த படமே தனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தருணம் காடு எப்படி இறுதி சமநிலை என்பதை நினைவூட்டுகிறது என்றும், பதவி, பட்டங்களை கடந்து நாம் அனைவரும் ஒன்றுதான் என்றும் சாகசங்கள் தான் நம்மை ஒன்றிணைக்கிறது என்றும் பியர் கிரில்ஸ் பெருமையுடன் தெரவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it