'என் இதயம் உடைந்தது'.. மாஸ்டர் சிவசங்கர் மறைவுக்கு பிரபல நடிகர் உருக்கம் !!
'என் இதயம் உடைந்தது'.. மாஸ்டர் சிவசங்கர் மறைவுக்கு பிரபல நடிகர் உருக்கம் !!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்.
கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு இன்று இரவு 8 மணியளவில் உயிர் பிரிந்ததாக அவரது மகன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரள, தெலுங்கு திரையுலகினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிபரல நடிகர் சோனு சூட் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், சிவசங்கர் மாஸ்டர்ஜியின் மறைவு செய்தி கேட்டு இதயம் உடைந்தது. அவரைக் காப்பாற்ற எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால் கடவுளுக்கு வேறு திட்டங்கள் இருந்தன. உங்களை எப்போதும் மிஸ் பண்ணுவேன் மாஸ்டர்.
சிவசங்கர் மாஸ்டர்ஜியின் இழப்பை தாங்கும் சக்தியை அந்த குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல இறைவன் தருவானாக. சினிமா உங்களை எப்போதும் மிஸ் செய்யும் சார் .. 💔
Heartbroken to hear about the demise of Shiv Shankar masterji. Tried our best to save him but God had different plans. Will always miss you masterji.
— sonu sood (@SonuSood) November 28, 2021
May almighty give strength to the family to bear this loss.
Cinema will always miss u sir 💔 pic.twitter.com/YIIIEtcpvK
முன்னதாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவரது மருத்துவ சிகிச்சைகளுக்கு போதிய பணம் இல்லாததால், அவரது மகன் அஜய் கிருஷ்ணா திரை பிரபலங்கள் உதவுமாறு கோரிக்கை வைத்து இருந்தார். நடன இயக்குநர் சிவசங்கர் சிகிச்சைக்கு சோனு சூட் உதவுவதாக உறுதி அளித்து உதவி இருந்தார்.
newstm.in

