Theme Check

இந்தியாவுக்குள் மியான்மர் போலீஸ்! எல்லையில் பதற்றம்!

இந்தியாவுக்குள் மியான்மர் போலீஸ்! எல்லையில் பதற்றம்!

இந்தியாவுக்குள் மியான்மர் போலீஸ்! எல்லையில் பதற்றம்!
X

மியான்மரில் பிப்ரவரி 1ம் தேதி மக்களாட்சியை கலைத்து விட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவத்துக்கு எதிராக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 போலீசாரை அந்த மாநில போலீசார் பிடித்துள்ளனர். இந்தியா, மியான்மர் இரு நாட்டு எல்லையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள லங்காவ் கிராமத்தில் சாதாரண உடையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மியான்மர் ராணுவம் இட்ட கட்டளைகளை தாங்கள் நிறைவேற்றாததால், தங்களை ராணுவம் தேடுவதாகவும், எனவே இந்தியாவிடம் அடைக்கலம் பெறுவதற்காக எல்லை தாண்டி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராணுவத்துக்கு பயந்து மியான்மர் போலீசார் இந்தியாவுக்குள் ஊடுருவியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:
Next Story
Share it