Theme Check

ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம எலக்ட்ரானிக் பொருள்..! பணத்தை கொள்ளையடிக்க பலே திட்டம்?

ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம எலெக்ரானிக் பொருள்..! பணத்தை கொள்ளையடிக்க பலே திட்டம்?

ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம எலக்ட்ரானிக் பொருள்..! பணத்தை கொள்ளையடிக்க பலே திட்டம்?
X

புதுச்சேரியிலுள்ள எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்மில் மர்ம பொருள் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ளது லாஸ்பேட்டை. இங்குள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றவர்கள், அந்த ஏடிஎம் இயந்திரத்தில் எலெட்ரானிக் பொருள் ஒன்று ஒட்டப்பட்டு இருந்ததை கண்டனர். பின்னர் அவர்கள் அதனை எடுத்து பார்த்ததோடு இதுகுறித்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து அருகில் உள்ள வங்கிக்கு தகவல் அளித்துவிட்டு சென்றுவிட்டனர்.

ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம எலக்ட்ரானிக் பொருள்..! பணத்தை கொள்ளையடிக்க பலே திட்டம்?

இதனை அடுத்து லாஸ்பேட்டை SBI வங்கி கிளையில் இருந்து சைபர் கிரைம்க்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்டதற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம எலக்ட்ரானிக் பொருள்..! பணத்தை கொள்ளையடிக்க பலே திட்டம்?தொழில்நுட்ப கொள்ளையர்கள் யாரும் எதாவது கருவியை பொருத்தி ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்களின் பின் நம்பரை வைத்து பணம் திருட முயன்றனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it