மாற்று சிலையை வைத்து விட்டு ஐம்பொன் சிலையை ஆட்டய போட்ட மர்ம நபர்கள்..!
மாற்று சிலையை வைத்து விட்டு ஐம்பொன் சிலையை ஆட்டய போட்ட மர்ம நபர்கள்..!

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் வராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு நேர்த்திக் கடனுக்காக ஐம்பொன் சிலை ஒன்றை இந்த கோவிலுக்கு வழங்கியுள்ளார்.
அந்த சிலை கடந்த சில ஆண்டுகளாக கோவிலில் இருந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அந்த சிலை காணப்படவில்லை. இது குறித்து சிலர் அளித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான திவான் திருஉத்திரகோசமங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் திருஉத்திரகோசமங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன், “கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரை அடி உயரம் கொண்ட ஐம்பொன் சிலை காணாமல் போயுள்ளது.
ஆனால், அதற்கு மாற்றாக வேறு சிலை வைக்கப்பட்டுள்ளதால் சிலையை மாற்றிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

