Theme Check

நாகேஷ் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.. ‘பீஸ்ட்’ நாயகி குற்றச்சாட்டு..!

நாகேஷ் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.. ‘பீஸ்ட்’ நாயகி குற்றச்சாட்டு..!

நாகேஷ் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.. ‘பீஸ்ட்’ நாயகி குற்றச்சாட்டு..!
X

தமிழில் இந்த ஆண்டின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றான விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தெலுங்கு, ஹிந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே சற்று நேரத்திற்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான், மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்தேன். அப்போது அதிலிருந்த விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.

அவரது திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். நான், வழக்கமாக இது போன்ற பதிவுகளை வெளியிடுவதில்லை. ஆனால், ஊழியர் நாகேஷ் என்னிடம் வெளிப்படுத்திய விதம் பயங்கரமாக இருந்தது.

அதனால், அதை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த பதிவை வெளியிடுகிறேன்” என்று பதிவிட்டு இண்டிகோ விமான நிறுவனத்தை டேக் செய்துள்ளார்.

பிரபல விமான நிலைய ஊழியர் மீது பிரபல நடிகை நேரடியாக குற்றச்சாட்டு வைத்துள்ள சம்பவம், தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
Share it