நளினிக்கு ஒரு மாதம் பரோல்.. தமிழக அரசு முடிவு..!
நளினிக்கு ஒரு மாதம் பரோல்.. தமிழக அரசு முடிவு..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். இந்நிலையில் அவருடைய தாயார் பத்மா தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தனது மகளுக்கு பரோல் வழங்கவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில் தனது மகளுக்கு பரோல் வழங்க அரசுக்கு உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது பரிசீலணையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அரசிடம் விளக்கம் கேட்டிருந்தனர். இதற்கிடையில், முதலமைச்சரின் தனிப்பிரிவில் நளினியின் தாயார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
ஜின்னாவின் விளக்கத்தையேற்று நளினியின் தாயார் வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நளினிக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story

