மோடியின் பாதுகாப்பு செலவு மட்டும் ரூ.600 கோடி!
இந்த பட்ஜெட்டில் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக SPG மட்டும் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி 2019ல் 540 கோடியாகவும்,2018-ம் ஆண்டு 420 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முக்கிய தலைவர்களில் SPG சிறப்பு பாதுகாப்பில் இருப்பவர் பிரதமர் மோடி மட்டுமே...!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் குறித்து ஆதரவான குரல்களும், எதிர்ப்புக்களும் உருவாகி வருகிறது. இந்த நிலையில் மோடியின் பாதுகாப்பிற்காக 600கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பலத்த சர்சையை எழுப்பியுள்ளது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு பிரதமருக்கான கூடுதல் பாதுகாப்பு ,சிறப்பு பிரிவின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அவர்கள் குடும்பத்திற்கு அதாவது சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக SPG பிரிவின் கீழ் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. 2019 நவம்பர் மாதத்திற்குப் பிறகு மத்திய அரசு அந்த பாதுகாப்பைத் திரும்பப் பெற்றது .தற்சமயம் CRPF-Zplus பாதுகாப்பு நடைமுறையில் செயல்படுத்தப் படுகிறது.
இந்த பட்ஜெட்டில் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக SPG மட்டும் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி 2019ல் 540 கோடியாகவும்,2018-ம் ஆண்டு 420 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முக்கிய தலைவர்களில் SPG சிறப்பு பாதுகாப்பில் இருப்பவர் பிரதமர் மோடி மட்டுமே...!
newstm.in

