Theme Check

நாசாவின் விண்வெளிப் பயணத் திட்டம்: இந்திய வம்சாவளி தேர்வு !

நாசாவின் விண்வெளிப் பயணத் திட்டம்: இந்திய வம்சாவளி தேர்வு !

நாசாவின் விண்வெளிப் பயணத் திட்டம்: இந்திய வம்சாவளி தேர்வு !
X

நாசாவின் விண்வெளிப் பயணத் திட்டத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நிலவு, செவ்வாய் கிரகம், சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றுக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. இது அமெரிக்காவின் கனவு திட்டங்களில் ஒன்று என்றே கூறலாம்.

இத் திட்டங்களுக்காக விண்வெளி வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் அண்மைக்காலமாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளுக்காக 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அவர்களிலிருந்து 4 பெண்கள் உள்ளிட்ட பத்து பேர் தற்போது தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

anil menen d

இந்த பத்து பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 45 வயதான அனில் மேனனும் ஒருவர் ஆவார். அமெரிக்க விமானப்படையில் லெப்டினன்ட் கர்னலாக அனில் மேனன் பணியாற்றி வருகிறார். இவர் ஹவார்வர்டு பல்கலைக்கழகத்தில் நியூரோபயாலஜியில் இளங்கலைப் பட்டமும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். ஏற்கனவே நாசாவின் முந்தைய விண்வெளி ஆய்வுகளிலும் பணியாற்றிய அனுபவமும் பெற்றுள்ளார்.


newstm.in

Next Story
Share it