Theme Check

ராதாரவியை வெளுக்கும் நாசர்!மீண்டும் துவங்கும் குடுமிப்பிடி சண்டை!

சின்மயிக்கு ஆதரவாக ராதாரவியை வெளுக்கும் நாசர்!மீண்டும் துவங்கும் குடுமிப்பிடி சண்டை!

ராதாரவியை வெளுக்கும் நாசர்!மீண்டும் துவங்கும் குடுமிப்பிடி சண்டை!
X

‘மீ டூ’ புகார்கள் பாலிவுட்டில் பரபரப்பாக இருந்தாலும், தமிழ் திரையுலகில் ‘மீ டூ’ என்று செக்ஸ் புகார்களை வாசிக்கும் பெண்களுக்கு எத்தனை யூனியன்கள் இருந்தாலும் இதுவரையிலும் நியாயங்கள் கிடைத்தப்பாடில்லை. சரி... நியாயம் எல்லாம் வேண்டாம். குறைந்தபட்சம் அவர்கள் சொல்கிற புகார்களை அணுசரணையாக காது கொடுத்தாவது கேட்க வேண்டுமே? அதற்கும் மெளனத்தையே பதிலாக தந்திருக்கிறார்கள் தமிழ் சினிமாவின் பெரிய மனிதர்கள். ஏனாம்?

ராதாரவியை வெளுக்கும் நாசர்!மீண்டும் துவங்கும் குடுமிப்பிடி சண்டை!

விஷயம் அப்படி. தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழக, இந்திய அரசியலிலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆதிக்கம் செலுத்துகிற கவிப்பேரரசு வைரமுத்து மீது சின்மயி மீ டூ புகார் சொன்ன போது, திரையுலகமே ஆடித்தான் போனது. இந்தப் பொண்ணுக்கு என்ன தைரியம்? என்று ஆளாளுக்கு கூடிப் பேசினாலும், உள்ளூர அந்த புகாரை ரசித்தவர்கள் ஏராளம்.

நிற்க. இந்த புகாருக்குப் பின்னர், எப்போதும் மனசுல பட்டதை மேடைகளில் போட்டு, பளிச்சென உடைத்துப் பேசிவிடுகிற நடிகர் ராதாரவி, சின்மயியை சீண்டி சில கருத்துக்களைச் சொன்னதும், டத்தோ ராதாரவி டக்-அவுட் ஆகிற அளவுக்கு இறங்கி வந்து சின்மயி விளாசிய பந்துகள் எல்லாமே பலம் வாய்ந்தவை. அதன் பின்னர், டப்பிங் யூனியனில் இருந்து சின்மயியை நீக்கியிருந்தார் ராதாரவி. பின் வழக்குத் தொடர்ந்து யூனியனில் மீண்டும் இடம் பெற்றார் சின்மயி.

ராதாரவியை வெளுக்கும் நாசர்!மீண்டும் துவங்கும் குடுமிப்பிடி சண்டை!

ஒரு பெண், இத்தனை தைரியமாய் தான் நினைக்கிற உண்மைக்காகப் போராடுவது பெருமையல்லவா? ஆமாம்... அப்படியே டப்பிங் யூனியன் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார் பாடகி சின்மயி. அதுவும் ராதாரவியை எதிர்த்து அதே தலைவர் பதவிக்கு.

இப்படித்தான் யாருமே கண்டுக்கொள்ளாமல் இருந்த நடிகர் சங்க தேர்தலிலும், விஷாலுக்கு கொம்பு சீவி விட்டு, மண்ணைக் கவ்வினார் ராதாரவி. இப்போது டப்பிங் யூனியனில் சின்மயியை பெரிய ஆளாக்குகிறார் என்று ஆளாளுக்கு ராதாரவியை கலாய்க்கிறார்கள். இந்நிலையில், சின்மயி போட்டியிடும் அதே அணியில், ராதாரவி அணிக்கு எதிராக நடிகர் நாசர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

ராதாரவியை வெளுக்கும் நாசர்!மீண்டும் துவங்கும் குடுமிப்பிடி சண்டை!

ஒரு சங்கத்தையும் விட்டு வைக்காதீங்க... எல்லா சினிமா சங்கங்களும் நாசமாகவே போகட்டும். அப்புறம் உங்க அணியில் இருக்கிறவங்க எல்லோரும் சொந்த கம்பெனியில படங்களைத் தயாரிச்சு, நடிச்சு, உங்க படங்களையும், உங்களுக்கு வேண்டியவர்களின் படங்களையும் மட்டும் விழாக்காலங்களில் ரிலீஸ் பண்ணிக்கோங்க என்று புலம்புகிறார்கள் நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள்!

newstm.in

Tags:
Next Story
Share it