தேசம்... பக்தி... பேசும் பாஜக தலைவர்களின் வாரிசுகள் எங்கு படிக்கிறார்கள் தெரியுமா?
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இளையமகன் இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலையில் எம்.பி.ஏ படிக்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெய்சங்கரின் இரண்டு வாரிசுகளும் அமெரிக்காவில் படிக்கிறார்கள். மகன் துருவா ஜியார்ஜ்டவுன் பல்கலையில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கிறார்.

பாஜகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்களின் வாரிசுகள் யாரும் இந்தியாவில் படிக்கவில்லை. எல்லோரும் வெளிநாடு தான். மேக் இன் இந்தியா, நாடு, மக்கள், தேச பக்தி என பேசும் பாஜகவினர் இந்தியாவின் கல்வி முறையை நம்பவில்லை போல.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இளையமகன் இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலையில் எம்.பி.ஏ படிக்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெய்சங்கரின் இரண்டு வாரிசுகளும் அமெரிக்காவில் படிக்கிறார்கள். மகன் துருவா ஜியார்ஜ்டவுன் பல்கலையில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கிறார், மகள் மேதா டெனிசன் பல்கலைக்கழகத்தில் பி.ஏ சினிமா படிக்கிறார்.
செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் மகன் அபூர்வா, பாஸ்ட்டன் பல்கலைக்கழக பி.ஹெச்.டி மாணவர். சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் மகன் ஆதித்யா அமெரிக்காவின் கார்னகி பல்கலைக்கழகத்தில் படித்துவருகிறார். நிர்மலா சீத்தாராமன் மகள் வாங்மயி பரகலா அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலையில் எம்.ஏ ஜர்னலிசம் படிக்கிறார்.
சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனின் இளையமகன் சச்சின், மோனாஷ் பல்கலையில் படிக்கிறார். ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் மகள் சுபாஷினி ஆக்ஸ்ஃபோர்டில் படிக்கிறார். ரயில்வே அமைச்சர் ப்யூஸ் கோயலின் மகள் ராதிகா ஹார்வர்டு பல்கலையில் கடந்த ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். மகன் துருவ் அதே ஹார்வர்டில் பி.ஏ எக்கனாமிக்ஸ் படித்துக்கொண்டு இருக்கிறார்.
வடகிழக்கு மாநில முன்னேற்றத்துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங்கின் மகன் அருனோதய் ஆக்ஸ்ஃபோர்டில் படிக்கிறார். தொலைத்தொடர்பு துறை அமைச்சர் சஞ்சய் தோத்திரா மகன் நகுல் அமெரிக்காவின் கார்னகி பல்கலை மாணவர். விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் மகள் திலோத்தமா வார்விக் பல்கலைகழகத்தில் சட்டம் பயில்கிறார்.
அமித்ஷாவின் மகன் ஜேஷா மட்டும் தான் இந்தியாவில் கல்வி பயின்றவர். அவர் அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் தான் படித்தார். தேச பக்தி குறித்து வாய்கிழிய பேசும் பாஜகவினருக்கு இந்தியா மீதுள்ள நம்பிக்கை அவ்வளவுதான்.
newstm.in