Theme Check

திருமணத்திற்கு அழைக்காத மீடியாக்களிடம் ஆதரவு கோரினர் நயன் - விக்கி ஜோடி..!

திருமணத்திற்கு அழைக்காத மீடியாக்களிடம் ஆதரவு கோரினர் நயன் - விக்கி ஜோடி..!

திருமணத்திற்கு அழைக்காத மீடியாக்களிடம் ஆதரவு கோரினர் நயன் - விக்கி ஜோடி..!
X

சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவர்களின் திருமண விழாவை ஒளிபரப்ப பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் 25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதனால், மற்ற மீடியாக்களை அனுமதித்தால் திருமணம் குறித்த போட்டோக்கள் வெளியாகும் என்பதால் மீடியாக்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக இன்று (11-ம் தேதி) நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயன்தாரா, “எங்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. நாங்கள் தற்போது திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு உங்கள் ஆதரவும், ஆசீர்வாதமும் தொடர்ந்து கிடைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், “இந்த இடத்தில்தான் நான் கதை சொல்ல நயன்தாராவை முதன் முதலில் சந்தித்தேன். அதன் காரணமாகவே இந்த நிகழ்வை இங்கு நடத்த விரும்பினோம்" என்று தெரிவித்தார்.

Next Story
Share it