தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் - நயினார் நாகேந்திரன்..!!
தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் - நயினார் நாகேந்திரன்..!!

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அதில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டை பாண்டியநாடு பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும். நிர்வாக வசதிக்காக ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி, தென்காசியை இரண்டாக பிரித்தனர். அதன்பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு கிடைத்துள்ளன. அதுபோல தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்தால் இன்னும் பல திட்டங்களை கொண்டு வர முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம். தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று இனி போராட்டங்கள் நடைபெறலாம் எனக் கூறினார்.

