முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திடீர் சந்திப்பு !!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திடீர் சந்திப்பு !!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருகின்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் எப்போது இவர்களின் திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 9ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று இருவரும் அண்மையில் அறிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருமண இடத்தை இடம் மாற்றி வைத்தனர். இதன்படி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் ஜூன் 9ஆம் தேதி விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகி வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் தங்களின் திருமணத்திற்கு வருகை தருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
newstm.in

