சக எழுத்தாளரை மணந்தார் நயன்தாரா படத்தின் இயக்குநர்!!
சக எழுத்தாளரை மணந்தார் நயன்தாரா படத்தின் இயக்குநர்!!

நயன்தாராவின் மாயா, கனெக்ட் போன்ற படங்களின் இயக்குனரான அஸ்வின் சரவணன் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான மாயா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். முதல் படத்திலேயே தனது வித்தியாசமான திரைக்கதையால் கவனம் பெற்றார். அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவின் இறவாக்காலம் படத்தை இயக்கினார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பின்னர் டாப்ஸி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கினார். திகில் படமான இது 2019ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் அஸ்வின் சரவணனுக்கு, தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் தன்னுடன் படங்களில் பணியாற்றிய சக எழுத்தாளரான காவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
It started with pen and paper. It has ended in poetry ♥️ Kaavya Ramkumar, thank you for riding out the storm with me every single time. Doing this with you, especially during the third wave, was an adventure by itself. pic.twitter.com/WWlGs3lrm7
— Ashwin Saravanan (@Ashwin_saravana) January 30, 2022
இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பேனா, பேப்பருடன் தொடங்கிய இந்த பந்தம், கவிதை நடையில் காதலாக முடிந்திருக்கிறது என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in

