Theme Check

வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண அழைப்பிதழ்!!

வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண அழைப்பிதழ்!!

வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண அழைப்பிதழ்!!
X

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவர்களின் திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு , விக்னேஷ் சிவனுடன், ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் 2015ஆம் ஆண்டு அவர் இயக்கிய 'நானும் ரவுடி தான்படத்தின் போது, அவருக்கும் நயன்தாராவுக்கும், காதல் மலர்ந்தது.

Nayanthara vigneshshivan

அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இருவருக்கும் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று முதற்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது திருமண இடத்தை அவர்கள் மாற்றி வைத்துள்ளனர். அதன்படி சென்னை, மகாபலிபுரத்தில் இருவரின் திருமணமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

nayan

newstm.in

Next Story
Share it