சீரடி சாய்பாபா கோவிலில் காதலனுடன் நயன்தாரா !! வைரல் புகைப்படங்கள்

சீரடி சாய்பாபா கோவிலில் காதலனுடன் நயன்தாரா !! வைரல் புகைப்படங்கள்

சீரடி சாய்பாபா கோவிலில் காதலனுடன் நயன்தாரா !! வைரல் புகைப்படங்கள்
X

டிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது ஊர் அறிந்த விஷயம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

nayan

நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இது தொடர்பான அதிகார்வப்பூர்வ தகவல் அண்மையில் தான் தெரியவந்தது. இந்த நிலையில், நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று சாமிகும்பிட்டனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் விரைவில் ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்டப் படங்களும் விக்னேஷ் சிவன் இயக்கி தயாரிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் விரைவில் வெளியாகவிருக்கின்றன.வரும் தீபாவளிக்கு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ படம் வெளியாகிறது.

nayan

இந்த நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டனர். அதோடு, மும்பையிலுள்ள சித்தி விநாயகர், மகாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர்.

இந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் விக்னேஷ் சிவன். தற்போது அவை வைரலாகி வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it