Theme Check

ஒரு நாளைக்கு 20000 ரெம்டெசிவிர் குப்பிகள் வேண்டும் ! மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை !

ஒரு நாளைக்கு 20000 ரெம்டெசிவிர் குப்பிகள் வேண்டும் ! மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை !

ஒரு நாளைக்கு 20000 ரெம்டெசிவிர் குப்பிகள் வேண்டும் ! மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை !
X

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 1.45 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலருக்கும் சுவாசப் பிரச்னை ஏற்படுவதால் ஆக்சிஜன் மற்றும் மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது.

அந்த வகையில் கொரோனா தொற்றால் பாதித்து அவர்களில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களிலும் இம்மருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் ரெம்டெசிவிர் மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இதன்படி, தமிழ்நாட்டிற்கு இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரம் குப்பிகள், அதாவது நாளொன்றுக்கு 7 ஆயிரம் குப்பிகள் என்ற அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு குறைந்த அளவு மருந்து குப்பிகள் மட்டும் அளித்துள்ளது.

எனவே, தமிழ்நாட்டிற்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை உடனடியாக உயர்த்தித் தர வேண்டுமென மத்திய இரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்-க்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தொலைப்பேசி வாயிலாக மத்திய அமைச்சரிடம் பேசிய மு.க. ஸ்டாலின், நாளொன்றுக்கு தமிழகத்திற்குக் குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்தை ஒதுக்கீடு செய்யுமாறும், அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்திற்கு ரெம்டெசிவிர் மருந்து அதிகமாக வழங்குவது குறித்து பரிசீலித்து ஆவன செய்வதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it