அதிகரிக்கும் கொரோனா… திசைதிருப்பும் ஐபிஎல் தேவையா? - கில்கிறிஸ்ட் விமர்சனம் !
அதிகரிக்கும் கொரோனா… திசைதிருப்பும் ஐபிஎல் தேவையா? - கில்கிறிஸ்ட் விமர்சனம் !

கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் ஐபிஎல் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு கவலையடைய வைக்கிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், கொத்து கொத்தாக மக்கள் செத்துக்கொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் தொடர் தேவையா என்ற கேள்வி எழுகிறது.
ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி வீரரும் ஐபிஎல் தொடரில் விளையாடியவருமான ஆடம் கில்கிறிஸ்ட்டும், ஐபிஎல் தொடர் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்தியர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் அங்கு நடைபெறும் ஐபிஎல் தொடர் பொருத்தமற்றது இல்லையா? அல்லது மக்களைத் திசைதிருப்பவே போட்டிகள் நடத்தப்படுகிறதா? எதுவாயினும் இந்தியர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
தற்போது கில்கிறிஸ்ட்டின் கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கில்கிறிஸ்ட் எழுப்பும் கேள்வி நியாயமானதுதான். ஐபிஎல் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என சிலர் ரீட்வீட் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் சிலர் ஐபிஎல் தொடர் தொடர வேண்டும் என கூறியுள்ளனர்.

கொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருந்து, தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. மேலும் இதனை சரிப்படுத்த விரைவான நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் பல இடங்களில் உடல்கள் சாலையோரங்கள், ஆற்றுகரையோரங்களில் தொடர்ந்து எரிக்கப்பட்டு வருகிறது.
இதனை மறைமுகமாக சுட்டிக்காட்டியே கில்கிறிஸ்ட் பதிவிட்டுள்ளார். ஆட்சியாளர்களின் அலட்சியத்தை திசை திருப்பும் முயற்சி எனவும் பலரும் கூறி வருகின்றனர்.
Best wishes to all in India 🇮🇳 Frightening Covid numbers. #IPL continues. Inappropriate? Or important distraction each night? Whatever your thoughts, prayers are with you. 🙏
— Adam Gilchrist (@gilly381) April 24, 2021
newstm.in

