நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு- மாணவர்கள் தங்கள் செல்போனிலே முடிவுகளை பார்க்கலாம் !!
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு- மாணவர்கள் தங்கள் செல்போனிலே முடிவுகளை பார்க்கலாம் !!

இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் 'நீட்' என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை பாதிப்பின் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
எனினும், நீட் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வெழுதினர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் மின்னஞ்சலை ஓபன் செய்து தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் குறித்த கூடுதல் தகவல்கள் நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளது. முதலிடம் பிடித்தவர்கள் விவரங்களும் இந்த தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.
newstm.in

