நீட் தேர்வு – வெளியானது மிக முக்கிய அறிவிப்பு!!
நீட் தேர்வு – வெளியானது மிக முக்கிய அறிவிப்பு!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடைபெற்று வருகிறது.
நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. 2022-23ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தொடங்கியது. மே மாதம் 6ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர்
அது மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது 20 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. www.neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
newstm.in

