Theme Check

‘நீட்’ தேர்வு அவசியம்.. மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்..!

‘நீட்’ தேர்வு அவசியம்.. மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்..!

‘நீட்’ தேர்வு அவசியம்.. மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்..!
X

2022 - 2023-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (17-ம் தேதி) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் எழுத இருக்கின்றனர். இதில், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் எழுத உள்ளனர்.

இந்த நிலையில், நீட் தேர்வில் கலந்து கொள்வது தற்போதைய சூழலில் அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள்.

தேர்வு தோல்வி பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாக அமையாது. பலமுறை முயற்சித்தும் கூட தேர்வில் வெற்றி பெற முடியும். நீட் தேர்வு குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

மாணவர்கள் நீட் தேர்வில் கலந்து கொள்வது தற்போதைய சூழலில் அவசியம் ஆகும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக முதல்வர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு உறுதிபடுத்தி உள்ளது. மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it