நெட்ஃபிளிக்ஸ் புதிய படம்.. ரூ.223 கோடி சம்பளம் பெறும் நடிகர் டிகாப்ரியோ !!

நெட்ஃபிளிக்ஸ் புதிய படம்.. ரூ.223 கோடி சம்பளம் பெறும் நடிகர் டிகாப்ரியோ !!

நெட்ஃபிளிக்ஸ் புதிய படம்.. ரூ.223 கோடி சம்பளம் பெறும் நடிகர் டிகாப்ரியோ !!
X

பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னடோ டிகாப்ரியோ. தனது நடிப்பின் திறனால் சர்வதேச அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். டைட்டானிக் திரைப்படம் மூலம் தனது முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்றார் டிகாப்ரியோ. இந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்துக்கு நடிகர் லியார்னடோ டிகாப்ரியோ இத்தனை கோடி சம்பளம் பெறுகிறாரா என திரையுலகம் அதிர்ந்துள்ளது.

ஆடம் மெக்கே இயக்கத்தில், நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் நகைச்சுவைப் படம் 'டோண்ட் லுக் அப்'. இரண்டு அடிமட்ட விண்வெளி வீரர்கள், பூமியைத் தாக்க வரும் மிகப்பெரிய எரிகல் ஒன்றைப் பற்றி எச்சரிக்கை செய்ய அமெரிக்காவைச் சுற்றிப் பயணிக்கின்றனர் என்ற கதையில் இப்படம் அமைந்துள்ளது.

leonardo dicaprio

இதில் நாயகனாக லியார்னடோ டிகாப்ரியோவும், நாயகியாக ஜெனிஃபர் லாரன்ஸும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக இருவரது சம்பளம் மட்டுமே கிடத்தட்ட 55 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் லியார்னடோ டிகாப்ரியோவுக்கு ரூ.223 கோடியும், ஜெனிஃபர் லாரன்ஸுக்கு ரூ.186 கோடியும் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா நெருக்கடியால் ஒத்திப்போடப்பட்ட இந்தப் படத்தின் வெளியீடு இந்த ஆண்டு சாத்தியமாகும் என்று நெட்ஃபிளிக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனால் இப்படத்தின் வெளியீடு தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


newstm.in

Tags:
Next Story
Share it