8ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்குவதாக பாடல்… கானா பாடகரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்!!
8ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்குவதாக பாடல்… கானா பாடகரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்!!

கானா பாடகர் ஒருவர் 8ஆவது படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்குவது பற்றி பாடியிருக்கும் நிலையில் அவரிடம் நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பால்வாடி படிக்கும்போதே வாங்கிக் கொடுத்தேன் பூந்திய, 8வது பாசாயிட்டு எடுக்க வச்சுட்டேன் வாந்திய, எதுக்கு தெரியுமா, நம்மல வுட்டுட்டு போவாது என்று அந்த கானா பாடகர் பாடியிருக்கிறார். இந்த பாடல் வரிகள் தான் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
இந்த வீடியோ தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்ணில் படும்வரை ஷேர் செய்வோம். அந்த பாடகரை கைது செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் கொதித்து வருகின்றனர்.
8 வது படிக்கும் சிறுவயது சிறுமியை கர்பமாக்குவோம், ஏன்னா அப்போ தான் எங்கள விட்டு போவாது - மேடையை கலக்கும் கானா பாடகர்.
— Vimal Varman (@RathinamVimal) December 21, 2021
பெண்கள் இந்த நாடக காதல் கும்பலிடம் ஜாக்கிரதையாக இருங்கள். pic.twitter.com/hw3L7jF9cY
அந்த பாடகர் யார், எந்த நிகழ்ச்சியில் இந்த பாடலை பாடினார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. பாடலின் 30 நொடி வீடியோ மட்டும் இணையத்தில் உலா வருகிறது.
இந்த நிகழ்ச்சி இயக்குநர் பா.ரஞ்சித் நடத்திய நீலம் பண்பாட்டு மையம் சார்பிலான மார்கழியில் மக்களிசை என்று ஒரு சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர்.
அந்த கானா பாடகர் நீலம் பண்பாட்டு மையத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் பாடிய நிகழ்ச்சியும் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

