Theme Check

துணிச்சலை ஒரு போதும் இழந்து விட வேண்டாம்.. கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி இரவில் உரை !!

துணிச்சலை ஒரு போதும் இழந்து விட வேண்டாம்.. கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி இரவில் உரை !!

துணிச்சலை ஒரு போதும் இழந்து விட வேண்டாம்.. கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி இரவில் உரை !!
X

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ஆவது அலை அச்சுறுத்தி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. மேலும், கொரோனா தடுப்பூசியும் மருந்தும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல மாநிலங்கள் புகார் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்றிரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, கொரோனா இரண்டாவது அலையாக உருவெடுத்து வந்திருக்கிறது. கொரோனா 2-ஆவது அலையால் மீண்டும் நாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முடிறியடிக்க இயலும் என நம்புகிறேன்.

தங்கள் உயிரைப் பணயம் வைத்து முன்களப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பாடுபடுகின்றனர். அத்தகைய முன்கள பணியாளர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். கடந்த வருடம் இருந்த மோசமான சூழல் இந்த வருடம் இல்லை. நாடு மீண்டும் ஒருமுறை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.

எத்தனை சவால்கள் இருந்தாலும் துணிச்சலை ஒரு போதும் இழந்து விட வேண்டாம்.கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை ஒரு புயலை போல நாடு முழுவதும் வீசி வருகிறது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பக்கம் நாம் துணை நிற்க வேண்டும் என கூறினார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் சரியான விஷயங்களை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். அவசியமற்ற பணிகளுக்கு வெளியே செல்லாமல், முடிந்தவரை வீட்டிலேயே இருந்து பணியாற்ற முன்வர வேண்டும். பொதுமுடக்கத்தை அமல்படுத்தும்போது மாநில அரசுகள் கடைசி ஆயுதமாகவே பயன்படுத்த வேண்டும் என்றார்.

பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் உயிர்களைக் காக்க வேண்டும் என்பதே அரசின் முயற்சி. தைரியத்தையும் அனுபவத்தையும் வைத்து மட்டுமே கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள முடியும். கொரோனா கட்டுப்பாட்டு மையங்களை அதிகரிப்பதன் மூலமும், கூட்டு முயற்சியாக செயல்படுவதன் மூலமும் நாடு முழுவதும் முழு முடக்கம் வருவதைத் தடுக்க முடியும் என தெரிவித்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it